சனி, 21 மே, 2011

நந்தியின் முதுகில் திமில் ( The Hump on Nandhi's back)





















விலை: ரூ.15


பதிப்பு: அறிவியல் வெளியீடு ( தமிழ்நாடு அறிவியல் இயக்கம் & புதுவை அறிவியல் இயக்கம் )

2 கருத்துகள்:

  1. நந்தியின் முதுகில் உள்ள திமில் விலங்கியல் குறித்த தமிழ் நூல்கள் மிகவும் அரிது. அதிலும் இத்தாலஜி (Ethology) எனும் விலங்கு நடத்தை இயல் பற்றிய புத்தகம் என்றால் ரொம்ப அபூர்வமானது தான். சாதாரண வாசகர்கள் படித்துணரும்படி கதை சுவாரசியம் குன்றாமல் எழுதுவது ரொம்ப சிரமம். முனைவர் பா. ராம் மனோகர் முயற்சி செய்திருக்கிறார். அதில் ஓரளவு வெற்றியும் கண்டிருக்கிறார். நிறைய கனமான விஷயங்கள்...ஆச்சரியங்கள் என்று புத்தகம் முழுவதுமே நிரம்பிக் காணப்படுகின்றன.

    ஒரே மாதிரி நடத்தை மரபு மாற்றதாங்கு திறன் ((Resistence to phylogenetic change) முதல் குறியீடு அல்லது தூண்டுதல் கொள்கை வரை பல கனமான அறிவியில் விஷயங்களை அடுத்தடுத்து புத்தகம் எடுத்து வீசுகிறது. ஆய்வு விலங்குகளை இனம் கண்டு அழிவிலிருந்து காக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளை விவரிப்பது புத்தகத்தின் மிகவும் பயனுள்ள பகுதி. நடத்தையை நடத்தும் ஹார்மோன்கள் பற்றிய விளக்கம்..தேனீக்களின் நாட்டிய மொழி....பல மைல் சென்று திரும்பும் பறவைகள் என பல ஆச்சரியங்கள் இந்நூலில் உண்டு.
    - நன்றி : கீற்று வலைப்பூ

    பதிலளிநீக்கு