திங்கள், 16 செப்டம்பர், 2013

ஐசான் வால்நட்சத்திரப் பிரச்சாரம் - குறிப்பு



மிழ்நாடு அறிவியல் இயக்கம் 

 ஐசான் வால்நட்சத்திரப் பிரச்சாரம் 


(சுறுக்கமான கருத்துக் குறிப்பு ) 
வானவியல் என்பது அனைவருக்கும் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தக் கூடியது. இதற்குக் காரணம் வானம் அனைவருக்கும் ஒரு பொதுவான ஆராய்ச்சிக் கூடமாக விளங்குவதேயாகும். எனவேதான் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மற்றும் படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை அனைவரும் இரவில் வானத்தை நோக்குவது என்பது மனிதன் தோன்றிய கலத்தில் இருந்து பிடித்தமான செயலாக இருந்து வருகிறது. இதுவே வானவியல் அறிவியல்களின் தாயாக அமையக் காரணமாகவும் விளங்கியது.
குழந்தைகள் மட்டும் அல்லாது அனைவருமே அறிவியலைப் படிப்பதை விட நேரடியாகச் செய்து பார்ப்பதின் மூலம் எளிதில் கற்றுக் கொள்கிறோம். மேலும் ஆர்வமும் அதிகமாகிறது. அறிவியல் ஆர்வத்தை மக்களிடம் ஊக்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு மத்திய அறிவியல் தொழில் நுட்பத்துறையின் Vigyan Prasar மற்றும் NCSTC-network ஆகியவை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் போன்ற நம்நாடு முழுவதும் உள்ள பல தன்னார்வ அறிவியல் இயக்கங்களுடன் சேர்ந்து பல பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன. சமீபத்தில் நடந்த சர்வதேச வனவியல் ஆண்டு – 2009, வளைய சூரியகிரகணம் -2010, வெள்ளி இடைநகர்தல் – 2012 (Transition of Venus) போன்றவற்றை மக்களிடத்தில் ஒரு இயக்கமாகக் கொண்டு சென்றதை உதாரணமாகக் கூறலாம்.
தற்போது சூரியனை நெருங்கிவரும் ஐசான் (C/2012 ISON) என்ற வால்நட்சத்திரம் அறிவியலை மக்களிடத்தே பரப்புவதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வால்நட்சத்திரம் நவம்பர் முதல் இரண்டாம் வாரத்திலிருந்து தெரிய ஆரம்பிக்கிறது. நவம்பர் 28ம் தேதி சூரியனுக்கு வெகுஅருகில் சென்று பின் டிசம்பர் முதல் மீண்டும் தெரியும். இந்த நூற்றாண்டின் மிக பிரகாசமன வால் நட்சத்திரமாய் அமையலாம் எனக் கருதப்படுகின்றது.
இந்த வான் நிகழ்வினை அனைத்து பள்ளிக் குழந்தைகளும் குறிப்பாக கிராமப்புறக் குழந்தைகளுக்கு வானவியலின் ஆர்வத்தை ஏற்படுத்துவற்கான ஓர் வாய்ப்பாகக் கருதலாம்.
இந்நிகழ்வினை நாடுமுழுவதும் மக்களிடம் கொண்டு செல்ல Vigyan Prasar, அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு (AIPSN) மற்றும் IIAP, IUCAA, NRCA போன்ற வான் ஆராய்ச்சி நிறுவனங்கள் இணைந்து Eyes on Ison என்ற பிராச்சார இயக்கத்தை மேற்கொண்டுள்ளன.
தமிழ்நாட்டில் இதனை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஒருங்கிணைக்கின்றது. இதற்காக வால்மீன்கள் பற்றிய பல விளக்கப்படங்கள், சுவரொட்டிகள், கையேடு, நழுவுப்படக்காட்சிகள், வீடியோ, துண்டுப் பிரசுரங்கள் போன்றவற்றைத் தயாரித்து வருகின்றது. இந்தக் கருத்து மூலங்களை யார் வேண்டுமானாலும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ளவும் ஏற்பாடு செய்து வருகின்றது.
ஐசான் வால்நட்சத்திர பிரத்திரத்தினை தமிழகத்தில் கொண்டுசெல்லவதற்கு பொழுதுபோக்கு வானவியலாளர் குழுக்கள் (amateur astronomy clubs) , கல்வி நிறுவனங்கள், மகளிர் அமைப்புகள், தன்னார்வ அமைப்புகள், வானவியல் ஆர்வலர்கள் என பலதரப்பினரையும் இணைத்து ஒரு மேடையை அமைத்துள்ளது. இவர்கள் மாநில/மாவட்ட அளவிளான ஐசான் வால்நட்சத்திரத்திற்கான பயிற்சிப்பட்டறையில் (workshop on comet ISON) பங்குகொண்டு தங்கள் பகுதி மக்களுக்கும் குழந்தைகளுக்கும் விரிவாக இந்நிகழ்வினை எடுத்துரைப்பர்.
எனவே நீங்களும் இதில் இணைந்து, அனைவருமாக நம் மக்களிடையே அறிவியல் விழிப்புணர்வை மேம்படுத்துவோமாக.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக