வெள்ளி, 20 செப்டம்பர், 2013

மாநில ஐசான் பயிற்சிப்பட்டறைக்கு பங்குகொள்வதற்கான படிவம் ( State Level Workshop - EyesonISON campaign)


 தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
வரும் நவம்பர் மாதம் 28ம் தேதி ஐசான் என்ற வால்நட்சத்திரம் சூரியனுக்கு அருகில் வருகின்றது. இந்நிகழ்வின்மூலம் அகிலைந்திய அளவில் மக்களிடைய அறியவியல் விழிப்புணர்வை பரப்புவதற்கு EyesonISON என்ற பிரச்சார இயக்கம் Vigyan Prasar மற்றும் அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு (AISPN) போன்றவை இணைந்து துவங்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் இதனை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ( TNSF) ஒருங்கிணைக்கின்றது.இதற்கான மாநில பயிற்சிப்பட்டறை செப்.23&24 தேதிகளில் திருப்பூர் ஜெய்வாபாய் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடக்க இருக்கிறது. இதில் கலந்து கொண்டவர்கள், கட்டாயமாக தன்னார்வ கருத்தாளர்களாக தங்கள் மாவட்டத்தில் இந்தப் பிரச்சாரத்தில் ஈடுபடுள்ள மற்ற அமைப்புகளுடன் சேர்ந்து செயல்படவேண்டும்.
இது ஓர் உறைவிடப் பயிற்சிப் பட்டறையாதலால் தங்குவதற்கு அப்பள்ளியிலேயே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது (dormitory type accomodation ).
பயணச்செலவை பயிற்சிக்கு வருபவர்களே ஏற்றுக்கொள்ளவேண்டியது இருக்கும்.
விருப்பமுள்ளவர்கள் செப்21ம் தேதிக்கு பிற்பகல் 2மணிக்கு முன்னதாக கீழ்காணும் படிவத்தை பூர்த்தி செய்யவும்.
தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு செப்.22ம் தேதி (ஞாயிறு) அன்று அவர்களுக்கு மின் அஞ்சலுக்கு அழைப்பிதழ் அனுப்பிவைக்கப்படும்.

Click the following link for the  form

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக