சனி, 21 மே, 2011

மனிதர்க்கு தோழனடி ( Manitharku thozhanadi )




















இன்றைய நகர வாழ்க்கைச் சூழலில் உலகைப் புரிந்துகொள்வதன் ஒரு பகுதியாக எண்ணற்ற ஆச்சிரியங்கள் நிரம்பிய உயிரினங்களின் உலகை புரிந்து கொள்வதின் முயற்சியின் ஒரு பகுதியே இப்புத்தகம்.

ஆசிரியர் : ஆதி வள்ளியப்பன்
விலை: 25

பதிப்பு: அறிவியல் வெளியீடு ( தமிழ்நாடு அறிவியல் இயக்கம் & புதுவை அறிவியல் இயக்கம் )

1 கருத்து:

  1. விலங்குகளோடு இயைந்து மனிதன் வாழ்ந்த ஒரு காலம் உண்டு. இன்று காடுகளின் ராஜா ஆகிவிட்ட அவன் தனது பழைய கால உற்ற தோழர்களான விலங்குகளை மதிப்பது இல்லை. பல உயிரிகள் அழிவின் விளிம்பில் உள்ளன......பல, இனிதோன்றப் போவதே கிடையாது. காக்கை குருவிகள் கூட பலவகை மாற்றங்களுடன் மனிதனை சகித்தபடி வாழ்வதை காண்கிறோம்...மண்புழு விவசாயிகளிடமிருந்து விடைபெற்று நாளாகிறது.

    மனிதனால் பழக்கப்படாத, வளர்க்கப்படாத ஆனால் மனிதனோடு தோழமை கொண்ட, பல்லி, தவளை, பாம்பு, அணில், வண்ணத்துப்பூச்சி, தேனீ, எறும்பு, நத்தை எனத் தொடங்கி துளிர் இதழில் வெளிவந்த ஆறு கட்டுரைகள் மூலம் விலங்கு உலகம் இல்லையேல் மனித உயிரே அழிந்து போகும் என்பதை குழந்தைகளுக்கு அழகான எளிய நடையில் விளக்கிச் சொல்கிறார் ஆதி. வள்ளியப்பன். முட்டையிட கரைக்கு வரும் பங்குனி ஆமை குறித்தும், உணவு முறைப்படி விலங்குகளை வரிசைபடுத்துவது குறித்தும், தனது குடலை வெளியே துப்பி உயிர் தப்பும் கடல் வெள்ளரி ஆகியவைகள் குறித்த செய்திகள் தமிழுக்கே புதிது.

    - நன்றி : கீற்று

    பதிலளிநீக்கு